ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா


ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல்- தொடர்பியல் துறை மற்றும் மின்னியல்- மின்னணுவியல் துறை சார்பாக மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கி ேபசினார். அப்போது அவர், மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் சேர்த்து துறை சார்ந்த வேலைவாய்ப்புக்கான பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாணவி தீபா அனைவரையும் வரவேற்று பேசினார்.

நெல்லை பெவிவைஸ் நெட்வொர்க்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். அவர் பேசும்போது, மாணவர்கள் தொழில்நுட்பத்துக்கான அடிப்படை கல்வியையும், தெளிந்த தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர் மன்றத்தின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவி ரேவதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் மாரியப்பன் ஆகியோர் நடப்பாண்டின் மாணவர் மன்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். மாணவி சுபித்ரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ஸ்ரீதேவி மகேஸ்வரி, ராம் சங்கர் மற்றும் துணை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story