பூங்கொடுத்து கொடுத்து மாணவிகளுக்கு வரவேற்பு
பூங்கொடுத்து கொடுத்து மாணவிகளுக்கு வரவேற்பு
உடுமலை
உடுமலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியைகள் பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள் 168, நடுநிலைப்பள்ளிகள்39, உயர் நிலைப்பள்ளிகள்16, மேல்நிலைப்பள்ளிகள்16 எனமொத்தம் 239 அரசுபள்ளிகளும், நகராட்சி தொடக்கப்பள்ளிகள்11, நடுநிலைப்பள்ளிகள் 6 எனமொத்தம் 17 நகராட்சி பள்ளிகளும் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகள் 10, நடுநிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளிகள்5 என 16 பள்ளிகளும், மெட்ரிக் உயர்நிலைப்பள்ளிகள் 7-ம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 14-ம் எனமொத்தம்21 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன.
சுயநிதி பள்ளிகளில் மழலையர் பள்ளிகள்26, ஒரு உயர்நிலைப்பள்ளி, 4மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 31 சுயநிதிபள்ளிகளும், சி.பி.எஸ்.சி.மேல்நிலைப்பள்ளிகள்5-ம், ஆதிதிராவிடர் பள்ளிகளில் 6 தொடக்கப்பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. இதுதவிர ஒரு சைனிக் பள்ளியும் உள்ளது. இந்த வகைபாட்டின்படி மொத்தத்தில் 26 மழலையர் பள்ளிகள், 195 தொடக்க பள்ளிகள், 46 நடுநிலைப்பள்ளிகள், 25 உயர்நிலைப்பள்ளிகள், 45 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம்337 பள்ளிகள் உள்ளன.
வரவேற்பு
இதில் இளம் மழலையர் மற்றும் மழலையர் பள்ளிகள் தவிர மற்ற 311 பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்திருந்தனர்.மாணவ, மாணவிகளை, ஆசிரியர்கள் இனிப்பு வழங்கிவரவேற்றனர்.மாணவிகளை, ஆசிரியைகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.உடுமலை தளிசாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை விஜயா தலைமையில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பூக்களை வழங்கிவரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விலையில்லா நோட்டு புத்தகங்களை தலைமையாசிரியை மகேஸ்வரி வழங்கினார்.
உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 2தாலுகாக்களைக் கொண்ட உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மொத்தம் 36ஆயிரத்து703 பேர் உள்ளனர்.இதில் முதல் நாளான நேற்று பள்ளிகளுக்கு 25ஆயிரத்து 811மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். வருகை சதவீதம்70ஆகும்.பள்ளிகள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த்கண்ணன், உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு 1மேற்கொண்டார்.அப்போது பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகர் உடனிருந்தார். ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த்கண்ணன் மேலும்சில பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
---
--
3 காலம்
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியைகள் பூக்கள் கொடுத்து வரவேற்றபோது எடுத்தபடம்
-----
-