ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணவி


ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணவி
x
தினத்தந்தி 15 Nov 2022 1:00 AM IST (Updated: 15 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே குழந்தைகள் தின கொண்டாட்டத்தின்போது மாணவி ஒருவருக்கு ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கவுரவம் வழங்கப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே குழந்தைகள் தின கொண்டாட்டத்தின்போது மாணவி ஒருவருக்கு ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கவுரவம் வழங்கப்பட்டது.

ஒருநாள் தலைமை ஆசிரியர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ என்பவருக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதை முன்னிட்டு அந்த மாணவி தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார். சால்வைகள் அணிவிக்கப்பட்டு மாணவி கவுரவிக்கப்பட்டார்.

கலந்துரையாடல்

தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாணவி யுவஸ்ரீ ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் மாணவர்கள் ஆயிரம் பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. முன்னதாக காலையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் மித்தேஷ் என்பவருக்கு தேசிய கொடி ஏற்றும் கவுவரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழி பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story