பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்
ஓசூரில் கல்லூரி, பள்ளி மாணவிகள் மாயமானார்கள்.
ஓசூர்
ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பெரியசாமி (வயது21) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் மத்திகிரி காடிப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் உமேஷ் (20) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.