வூசூ தற்காப்பு கலை போட்டி: ஓசூர் பள்ளி மாணவர்கள் சாதனை பிரகாஷ் எம்.எல்.ஏ. வாழ்த்து


வூசூ தற்காப்பு கலை போட்டி:  ஓசூர் பள்ளி மாணவர்கள் சாதனை  பிரகாஷ் எம்.எல்.ஏ. வாழ்த்து
x

வூசூ தற்காப்பு கலை போட்டியில் சாதனை ஓசூர் பள்ளி மாணவர்கள் பிரகாஷ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

நேபாளத்தில் உள்ள ரங்கசாலா ஸ்டேடியத்தில் சர்வதேச அளவிலான வூசூ விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் வூசூ பாக்சிங், கிக் பாக்சிங், தடகள போட்டிகள், கபடி, சிலம்பம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வூசூ தற்காப்பு கலை போட்டிகளில் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 8 பேர், ஜூனியர், சப் -ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கபதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். ஓசூர் திரும்பிய மாணவர்களை, பள்ளியின் முதல்வர் பபியோலா மேரி மற்றும் பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான வூசூ போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள் பிரகாஷ் எம்.எல்.ஏ.வை நேரில் வாழ்த்து பெற்றனர். அப்போது, பூனப்பள்ளி ஊராட்சி தி.மு.க. செயலாளர் மஞ்சுநாதப்பா, எடப்பள்ளி பிரகாஷ், ராமச்சந்திரன், சிங்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story