10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்மபுரி விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
தர்மபுரி பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தர்மபுரி*
தர்மபுரி பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தர்மபுரி பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த பள்ளி மாணவி அபிநயா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவிகள் பிரதிபா, சிவமதி ஆகியோர் 588 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் குமரேசன் 586 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த பள்ளி மாணவர்கள் 575 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேரும், 550-க்கு மேல் 70 பேரும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 4 பேரும், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் தலா 3 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 13 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 9 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கில பாடத்தில் இந்த பள்ளி மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா ஸ்ரீ 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
10-ம் வகுப்பு
இதேபோல் இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி அமிதா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், ஷாலினி, மித்ரன், பிரவின் பாரத் ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி மஞ்சரி 490 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதேபோன்று இந்த பள்ளி மாணவர்கள் கணிதம் பாடத்தில் 16 பேரும், அறிவியல் பாடத்தில் 10 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 5 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 5 பேர் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 3 பேர் 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டி.என்.சி. இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன் இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின், பள்ளி முதல்வர்கள் நாராயணமூர்த்தி, பத்மா, சிவகாமசுந்தரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.