பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை


பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சரக அளவிலான விளையாட்டு போட்டியில் பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் கலப்பம்பாடி மேல்நிலைப்பள்ளி சார்பில் ஜெயம் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாலிபால், கபடி, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு குழு போட்டிகளில் முதலிடம் பெற்றனர். மேலும் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் கார்த்திகேயன் சாம்பியன் பட்டமும், அதேபோல் 17 வயதிற்கான பிரிவில் மாணவர் விஜய், 19 வயதிற்கான பிரிவில் மாணவர் தருண் சிங் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். சரக அளவிலான போட்டிகளில் 108 புள்ளிகளுடன் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வீரன், மகேந்திரன், கண்ணன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ், லட்சுமணன், தமிழாசிரியர் முனியப்பன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன், வேளாண் ஆசிரியர் கிருஷ்ணன், உதவி வேளாண் திட்ட அலுவலர்கள் தாமோதரன், பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story