சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சரக அளவிலான விளையாட்டு போட்டியில் சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தர்மபுரி

தர்மபுரி சரக அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். சோலைக்கொட்டாய் அரசு பள்ளி மாணவிகள் ஹேண்ட்பால், ஆக்கி, கைப்பந்து ஆகிய போட்டிகளில் சாதனை படைத்தனர். இதேபோன்று மாணவர்கள் ஹேண்ட்பால், கைப்பந்து, கபடி ஆகிய போட்டிகளில் சாதனை படைத்தனர். இதேபோன்று தடகள போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவ, மாணவிகளை மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை, பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, உடற்கல்வி இயக்குனர் சிவகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கருணாகரன், குர்ஷித் பேகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story