கலைப்போட்டியில் மாணவர்கள் சாதனை


கலைப்போட்டியில் மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலைப்போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை சாதனை படைத்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

நெல்லை மாவட்டம் மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்ணியம் காப்போம் தினவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட கலை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 2-வது இடத்தை பிடித்த சாதனை படைத்தனர்.

போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளரும், முதல்வருமான பேட்ரிக் அந்தோணி விஜயன், ஆங்கில சிறப்பு ஆசிரியர் ரோஜர் மற்றும் ஆசிரியர்கள் சில்வியா சுமதி, கேத்ரின், சந்தன பிரபாகர், ஹாஜீஸ் சேசுராஜ், மோரிஸ் லூர்து ராஜ் ஆகியோர் பாராட்டினர்.


Next Story