வளையப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருவேங்கடம்:
தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் ஒற்றையர் இரட்டையர் பிரிவில் முதலிடமும் மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடமும், மாணவிகள் இளையோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வரும், தாளாளருமான வி.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.