அரசு- தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.
திருவாரூர்;
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவ-மாணவிகள் சேர்க்கை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி ஆகிய தாலுகாவில் தட்டாங்கோவில் பகுதியில் இயங்கி வரும் கோட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு, 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் ஆகும்.
விண்ணப்பிக்கலாம்
மன்னார்குடி தாலுகா தட்டாங்கோவில் பகுதியில் இயங்கி வரும் கோட்டூர் ஐ.டி.ஐ.-ல் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில் ்நுட்பம், வெல்டர் மற்றும் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் புதிதாக தொடங்கப்பட உள்ள படிப்புகள் ஆகியவற்றில் சேர்ந்து பயில ஐ.டி.ஐ.க்கு நேரில் சென்று விருப்பமுள்ள தொழிற்பிரிவில் சேர ஆன்லைன் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
வேலை வாய்ப்பு
விண்ணப்பக்கட்டணம் ரூ.50. விண்ணப்பத்தாரர் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். வெல்டர் படிப்புக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்ற தொழிற்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்திருக்கலாம்.ஐ.டி.ஐ. படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750- வழங்கப்படும்.படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுத்தரப்படும். மேலும் விவரம் அறிய 8072134721 மற்றும் 9894697154 என்ற செல்போன் எண்ணில்தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.