பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்


பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
x

ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட தொடங்குகிறது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

பேராவூரணி அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்) பி.காம், பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி இயற்பியல், பி.எஸ்சி வேதியியல், பி.பி.ஏ, எம்.ஏ (தமிழ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறள்ளது. பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வருகிற 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற 19-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) கடைசி நாள். முதல்கட்ட பொது கலந்தாய்வு 30-ந்தேதி முதல் வருகிற ஜூன் 9-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story