ஆக்கிரமிப்பு கடைகளால் மாணவ- மாணவிகள் பாதிப்பு
ஆக்கிரமிப்பு கடைகளால் மாணவ- மாணவிகள் பாதிப்பு அடைவதால் கடைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை
வாலாஜா நகராட்சி சார்பில் சோளிங்கர் சோளிங்கர், அரக்கோணம், அம்மூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ மாணவியர் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி முன்புறம் நின்று பஸ்சில் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் இடங்களை கடைகள் ஆ௳்கிரமித்து உள்ளன. அதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கொட்டும் மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story