மாற்றத்தை உருவாக்கக்கூடிய விதைகள் தான் மாணவர்கள்


மாற்றத்தை உருவாக்கக்கூடிய விதைகள் தான் மாணவர்கள்
x

மாற்றத்தை உருவாக்கக்கூடிய விதைகளாக மாணவர்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

மாற்றத்தை உருவாக்கக்கூடிய விதைகளாக மாணவர்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

போதைப்பழக்கம் தமிழ்நாட்டில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும். போதை பொருளுக்கு எதிராக ஏதோ ஒரு நாள் நாம் கூடினோம், உறுதிமொழி ஏற்றோம் என இருக்கக்கூடாது. பள்ளிகளில் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

புனிதப்போர்

நாட்டில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய விதைகளாக மாணவர்கள் இருக்க வேண்டும். கொரோனா தொற்றை விட மிகப்பெரிய தொற்றாக போதைப்பழக்கம் உள்ளது. அதிலிருந்து மீட்கக்கூடிய போரை புனிதப்போர் என்று கூட கூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பேரூராட்சி தலைவர்கள் துளசிதாஸ், செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், நரிக்குடி கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கதமிழ்வாணன், கமலி பாரதி, பேரூராட்சி துணைத்தலைவர்கள் மிக்கேலம்மாள், ரூபி சந்தோசம், தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் சிதம்பர பாரதி, காரியாபட்டி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் குருசாமி, கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பிரசாத், மல்லாங்கிணறு பேரூராட்சி கவுன்சிலர்கள் கருப்பையா, பாலச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story