மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பொன்னமராவதியில் அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் அரசுப்பள்ளியே சிறந்த தேர்வு என புதிய மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை தாங்கினார். வட்டார வள மேற்பார்வையாளர் (பொறுப்பு) நல்லநாகு, ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, பள்ளி தலைமையாசிரியர் அல்போன்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் அரசுப்பள்ளியே நம் தேர்வு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கல்வி கற்றல், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் கொண்டாட்டங்கள் என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய சாலை வழியான அம்மன் கோவில் வீதி, தொட்டியம்பட்டி சாலை, காமராஜ் நகர் வழியாக சென்று பெற்றோர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு ஊர்வலம் பள்ளியை வந்தடைந்தது. இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.