மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
சிவகாசி பகுதிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி பகுதிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கழிப்பறை தினம்
திறந்தவெளி பகுதியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வலியுறுத்தி சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களில் உலக கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விஸ்வநத்தம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதில் துணை தலைவர் நாகேந்திரன், பஞ்சாயத்து செயலர் செல்வம் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தேவர் குளத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளிமச்சக்காளை, துணைத்தலைவர் ராஜேஸ்வரி, செயலர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சுக்கிரவார்பட்டி
பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன், செயலர் லட்சுமண பெருமாள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் தொடங்கி வைத்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர், பஞ்சாயத்து செயலர் கண்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜ் தொடங்கி வைத்தார். இதேபோல் ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், சாமிநத்தம், சித்துராஜபுரம், நாரணாபுரம், மேலாமத்தூர், ஆனைக்குட்டம், பூலாவூரணி, புதுக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துக்களிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.