அரசு பள்ளி முன்பு மாணவர்கள் 'திடீர்' போராட்டம்


அரசு பள்ளி முன்பு மாணவர்கள்   திடீர் போராட்டம்
x

தக்கலையில் அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் ‘திடீர்’ ேபாராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலையில் அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் 'திடீர்' ேபாராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளி

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைநேரங்களில் வகுப்பறைகளின் சாரல் விழுவதால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என கூறினார். ஆனால், 3 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்ைல.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயநிர்மலா தலைமையில் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பள்ளியின் வாசல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டும். கழிவறை வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை பிடித்தவாறு கோஷமிட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆறுமுகநயினார், ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்றனி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தக்கலை வட்டார தொடக்கப் பள்ளி அலுவலர் சோபனகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரோடு பேச்சுவார்தை நடத்தினர்.

ரூ.64 லட்சத்தில்...

அப்போது 'பள்ளிக்கு நிரந்தர புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.64 லட்சத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும். அதுவரைக்கும் தற்காலிகமாக அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வகுப்பறைகள் அமைத்து தரப்படும்' என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆறுமுகநயினார் தெரிவித்தார்.

இதையடுத்து காலை 11.45 மணியளவில் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story