விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

விண்ணப்பிக்கலாம்

2023-2024-ம் ஆண்டிற்கான சிறப்பு விளையாட்டு விடுதி மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணி ஆகும்.

நிராகரிக்கப்படும்

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி காலை 7 மணியளவில் தடகளம், குத்துச்சண்டை பளுதூக்குதல், கபடி (பெண்கள் மட்டும்) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும், கூடைப்பந்து, கையுந்துபந்து, வாள்வீச்சு (ஆண்கள்) கால்பந்து, கைப்பந்து (பெண்கள் மட்டும்) ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கிலும், ஆக்கி (மாணவ, மாணவிகளுக்கு) எம்.ஆர்.கே. ஆக்கி விளையாட்டரங்கிலும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story