மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2022-ம் ஆண்டிற்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மற்றும் மற்றும் ஐ.டி.ஐ. வெற்றி பெற்றவர்கள் இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேரலாம். கல்லூரி கட்டணம் ரூ.2,352. மேலும் தகுதி உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்படும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் காசி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story