சமுதாய கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


சமுதாய கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாய கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும்.

திருவாரூர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாய கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும்.

சமுதாய கல்லூரி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாய கல்லூரியின் பொறுப்பு அதிகாரி வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சமுதாய கல்லூரியில் கிராம புற மாணவர்களுக்கு தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற்றுத்தரக்கூடிய வகையில் நடப்பாண்டில் 3 ஆண்டு கால இளங்கலை பி.காம் தொழில் படிப்பு, டிஜிட்டல் ஜெர்னலிசம் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகள், பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் படிப்புகள்

மேலும் ஓராண்டு டிப்ளமோ கல்வெட்டியல் படிப்பு, ஆறு மாதச் சான்றிதழ் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த படிப்புகள் மாணவர்களின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில் சிறப்பான பாடத்திட்டங்கள் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. நமது கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த கல்லூரியில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க https://san.as.in/community-college/என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது 733643445, 8610599742 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளவும்,

25-ந்தேதி கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து com-collegegicutn.ac.in என்ற ஈமெயில் மூலமோ அல்லது நேரிலோ வருகிற 25-ந் தேதிக்குள்(செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story