2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்


2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
x

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2-ம் கட்டகலந்தாய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 25-ந் தேதிக்குள்(வியாழக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.

தொழிற்பயிற்சியில் நிலையங்களில் சேர மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி, வயது வரம்பு

தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் பெற 04365-250129 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் govtitinagai@gmail.com தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story