மாணவிகள் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின்கீழ் நாகை மாவட்டத்தில் 33 கல்லூரிகளில் படிக்கும் 1,024 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து இங்கேேய உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
மருத்துவ கல்வி
2022-23-ம் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணையதளம் வழியாக இத்திட்டத்தின்கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும், 2-ம் ஆண்டிலிருந்து 3-ம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளும், தொழிற்கல்வியை பொறுத்தமட்டில் 3-ம் ஆண்டிலிருந்து 4-ம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் 4-ம் ஆண்டிலிருந்து 5-ம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.மாணவிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் களப்பணியாளர்கள் கிராம அளவில் நடைபெறும் கூட்டங்களில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.