போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் ஆன்லைனில் உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறலாம்


போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் ஆன்லைனில் உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறலாம்
x

போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறலாம் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆன்லைனில் உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறலாம் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உறுதிமொழி

தமிழ்நாட்டில் போதை மருந்துகள் மற்றும் மனமயக்க பொருட்கள் தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற குற்றங்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு முகாம்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக அமலாக்க பணியகம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் www.nibcid.org/pledge என்ற இணையதள முகவரியில் தங்களின் பெயர், பிறந்ததேதி, இணையதள முகவரி, செல்போன் எண், அஞ்சல் குறீயிடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இணைய வழியாக உறுதிமொழி எடுத்து கொள்ளலாம்.

சான்றிதழ்

மேலும் உறுதிமொழி எடுத்தவுடன் தாங்கள் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் அல்லது தங்களின் சமூக வலைதளத்தில் பகிரலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உறுதிமொழி எடுத்து அதற்கான சான்றிதழை தங்களின் வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story