அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்
நாகர்கோவிலில் அரசு பள்ளியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அரசு பள்ளியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
பிளஸ்-1 மாணவர்கள் மோதல்
நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் வடசேரி பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடைேய நேற்று மதியம் திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் வகுப்பறையில் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதல் வடசேரி மாணவன் தனது கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கினார். இதில் அந்த மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
காதல் விவகாரம்
இதைப்பார்த்த பள்ளி ஆசிரியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இவர்கள் இருவருக்கும் இடைேய ஒரே பெண்ணை காதலிப்பதில் போட்டி இருந்துள்ளது. இந்த போட்டி காரணமாக நேற்று இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி பஸ் நிலையம் அருகே காதல் விவராகத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.