ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிமாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா


ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிமாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா
x
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

போச்சம்பள்ளி அருகே வாடமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் சத்தியசுந்தரம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியரின் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளியின் வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மாது, போச்சம்பள்ளி தாசில்தார் அனிதா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் சத்தியசுந்தரத்தை மீண்டும் அதேபள்ளியில் பணி அமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.


Next Story