ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணா


ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணா
x

ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதானதும், அது தொடர்பான வழக்கையொட்டி பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் 2 ஆசிரியர்கள் சாதிய வேறுபாடுகளை பார்ப்பதாகவும், மாணவர்களிடையே மோதல் போக்கை உருவாக்குவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இடம் மாற்றக்கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் இளவரசன், உதவியாளர் பானுமதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடைந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து முசிறி கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) பாரதிவிவேகானந்தன் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில் பள்ளி ஆய்வக தொழில்நுட்ப அலுவலர் சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பள்ளியில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். மற்றொரு ஆசிரியர் இடம் மாற்றம் பற்றி கல்வித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story