அரசு டிஜிட்டல் நூலகத்தை பார்த்து மகிழந்த மாணவர்கள்


அரசு டிஜிட்டல் நூலகத்தை பார்த்து மகிழந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் அரசு டிஜிட்டல் நூலகத்தை பார்த்து மாணவர்கள் மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ராம. கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலகத்தில் அரசு சார்பில் 3டி மெய் நிகர் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் நூலகத்தை சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனந்தபுரம் டிஎன்டிடிஏ ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கிளை நூலகர் சித்திரைலிங்கம் டிஜிட்டல் நூலக செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஆசிரியர்கள் பிரபு, ஸ்டீபன். சங்கரன்குடியிருப்பு நூலகர் ராஜபிரபாவதி, கிளை நூலகர் இசக்கியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story