முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான  மாவட்ட அளவிலான போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்ேகற்றனர்.

மதுரை


முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்ேகற்றனர்.

விளையாட்டு போட்டி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டியை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

முதல் நாளான நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான (12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட) இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்க மாணவ, மாணவிகள் காலை 6 மணியில் இருந்தே மைதானத்திற்கு வர தொடங்கினர். போட்டிகள் காலை 8 மணிக்கு மேல் தொடங்கியது. தடகளம், கைப்பந்து, சிலம்பம் என ஒவ்வொரு போட்டியிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நீச்சல்போட்டி

நீச்சல் போட்டிக்கு அனைத்து பள்ளிகளிலும் இருந்து 142 மாணவர்கள், 34 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் இரண்டு இடம் பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டியில் விக்காசா பள்ளி மாணவி ரோஷினி நடைபெற்ற 5 போட்டிகளிலும் கலந்து கொண்டு அனைத்திலும் முதலிடம் பெற்றார். சி.இ.ஒ. பள்ளி மாணவன் குணபாலன் நான்கில் முதலிடமும் ஒன்றில் 2-ம் இடமும் பெற்றார்.

மாணவர்கள் பிரிவில் சி.இ.ஒ. பள்ளியை சேர்ந்த குணபாலன், குருபிரஷாத், மங்கையர்கரசி பள்ளி மாணவன் மீனாட்சிசுந்தரம், ஏ.ஜ. பள்ளி மாணவன் ஹேமாகார்த்திகேயன், புனித பிரிட்டோ பள்ளி மாணவன் ரத்தினவிஷ்ணு பெண்கள் பிரிவில் விக்காசா பள்ளி மாணவி ரோஷினி, ஸ்ரீராம்நல்லமணி பள்ளி மாணவிகள் பிரியதர்ஷினி, தமிழினி புனித ஜோசப் பள்ளி மாணவி லக்ஷனா, ஒ.சி.பி.எம்.பள்ளி மாணவி அன்னபூரணி, ஜெயின் பள்ளி மாணவி தர்ஷனாதேஷாஸ்ரீ, கே.வி. டி. பள்ளி மாணவி ஹாஷிராபாத்திமா ஆகியோர் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

போட்டிகளை மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், நீச்சல் பயிற்சியாளர் கோவிந்த்சக்கரவர்த்தி ஆகியோர் நடத்தி வீரர்களை தேர்வு செய்தனர். போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 பரிசு தொகை வழங்கப்படுகிறது. இன்றும் போட்டிகள் நடைபெறுகிறது.


Next Story