தமிழி எழுத்தில் மாணவிகள் வாழ்த்து கோலம்


தமிழி எழுத்தில் மாணவிகள் வாழ்த்து கோலம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:06+05:30)

திருப்புல்லாணி அரசு பள்ளியில் தமிழி எழுத்தில் மாணவிகள் வாழ்த்து கோலம் வரைந்து அசத்தினர்.

ராமநாதபுரம்

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். வகுப்பறைகளை சுத்தம் செய்து பள்ளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு அனைத்து வகுப்புகள் முன்பும் கோலங்கள் போடப்பட்டன. பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் கல்வெட்டு மற்றும் ஓலை சுவடிகளில் பயன்படுத்தப்பட்ட பழமையான தமிழி எழுத்துகளை எழுதப் படிக்கத் தெரிந்துள்ள 8-ம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ, வித்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் வகுப்பறைக்கு முன்பு பொங்கல் பானை, கரும்பு கோலத்துடன் பழமையான தமிழி மற்றும் தமிழ் எழுத்துகளில் 'இனிய பொங்கல் வாழ்த்து' என எழுதி இருந்தது அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story