செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்கள்
சாலையில் கிடந்த செல்போனை எடுத்து, மாணவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்
வடமதுரை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பத்ரிநாத் (வயது 13). இவர், வடமதுரையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில் நிலைய சாலையில், செல்போன் ஒன்று கீழே கிடந்தது. இதனைக்கண்ட பத்ரிநாத், அந்த செல்போனை எடுத்தார். பின்னர் அந்த செல்போனை, வடமதுரை போலீஸ் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமனிடம் பத்ரிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஒப்படைத்தனர். இதனையடுத்து மாணவர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர். இதற்கிடையே விசாரணை நடத்தப்பட்டு அந்த செல்போனை, அதன் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story