ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்


ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
x

ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவிகள் முதல் 3 இடம்பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவி ஷர்னிகா 500-க்கு 494 மதிப்பெண் பெற்றும், மாணவி தீபிகா 482 மதிப்பெண் பெற்றும், மாணவி பிரவீணா 481 மதிப்பெண் பெற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவ-மாணவிகள் 9 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 20 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் தலா ஒரு மாணவரும், அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக சிறந்த மதிப்பெண் பெற்று தொடர் சாதனை புரிந்து வருகின்றனர். இப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் அன்புசெல்வன் 600-க்கு 593 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கணேசன், செயலாளர் மருதப்பன், பள்ளியின் இயக்குனர் ஐ.எம்.செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது பள்ளி முதல்வர் ஜானகிராம் மற்றும் சாதனை மாணவர்களின்பெற்றோர்கள், கல்வி ஒருங்கிணைப்பாளர், ஆசிரிய-ஆசிரியைகள் உடனிருந்தனர். தற்போது பிளஸ்-1 வகுப்பிற்கு உயிரியல்-கணிதம், கணினி அறிவியல்-கணிதம், அக்கவுண்டன்சி-கணினி செயல்பாட்டியல், அக்கவுண்டன்சி-வணிக கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது என்று பள்ளி இயக்குனர் தெரிவித்தார். கடந்த 2022-ம் ஆண்டில் ஹரீஸ் 600-க்கு 592 மதிப்பெண் பெற்று மாவட்ட சிறப்பிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story