சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானதால் பரபரப்பு


தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 2 மாணவிகளையும் போலீசார் தேடிவருகின்றனர்.

கல்லூரி மாணவிகள்

சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த அச்சுதன் மகள் கார்த்திகா (வயது 19). இவர் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ(ஆங்கிலம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் சாத்தான்குளம் அருகேயுள்ள கொழுந்தட்டு மேலத்தெரு ராபர்ட்செல்வன் மகள் ஹெட்சிபா செல்வகுமாரி (20)வும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் நெருங்கி தோழிகள் என கூறப்படுகிறது.

வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் ஹெட்சிபா செல்வகுமாரி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார். அன்றையதினம் கார்த்திகாவும், வங்கிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லையாம்.

இருவரின் பெற்றோரும் அவர்களது மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

தந்தை புகார்

இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவிகளையும் தேடிவருகிறார். கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story