பெஞ்ச், டெஸ்க்குகளுக்கு வர்ணம் பூசிய மாணவ- மாணவிகள்


பெஞ்ச், டெஸ்க்குகளுக்கு வர்ணம் பூசிய மாணவ- மாணவிகள்
x

அங்கநாதவலசை அரசு உயர்நிலை பள்ளியில் பெஞ்ச், டெஸ்க்குகளுக்கு மாணவர்கள் வர்ணம் பூசினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே அங்கநாதவலசையில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 55 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் வருகிற 6-ந் தேதி முதல் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்தநிலையில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து தங்களது பெற்றோர்களின் அனுமதியுடன் கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்திய30 பெஞ்ச், டெஸ்க்குகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் வர்ணம் அடித்தனர். இப்பணியில் வகுப்பாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள்கள் ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர். மாணவர்களின் இச்செயலை பள்ளியின் சக ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பாராட்டினர்.


Next Story