தாய்க்கு பாத பூஜை செய்த மாணவர்கள்
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்கள், தங்கள் தாய்க்கு பாத பூஜை செய்தனர்.
வேலூர்
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் தாயின் பாதம் பணிவோம் நிகழ்ச்சி 1971-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்தது. தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் மார்த்தாண்டன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கவிஞர் லட்சுமிபதி கலந்து கொண்டு தாயின் மகத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 125 மாணவர்கள் தங்கள் தாயின் பாதங்களை கழுவி பூஜை செய்தனர். பூஜைக்கு தேவையான கற்பூரம், மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றை முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் முன்னாள் மாணவர் ராகவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story