சேறும், சகதியுமான சாலையில் மாணவர்கள் நாற்று நட்டு போராட்டம்
கண்ணமங்கலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் மாணவர்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கணக்கன்தோப்பு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து மாணவர்கள் சிலர் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாநாராயணன் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. மழைக்காலம் என்பதால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது' என்றார்.
Related Tags :
Next Story