இந்தி திணிப்பை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

இந்தி திணிப்பை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

மாநிலங்கள் மீதான மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சந்தோஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் குமாரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


Next Story