பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே பஸ்கள் நிற்காததை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே நத்தம், சோழசக்கரநல்லூர், மொழையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சோழசக்கரநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் ஏறி மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் மார்க்கத்தில் செல்வது வழக்கம். நேற்று காலை 8.30 மணிக்கு சோழசக்கரநல்லூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்கள் பஸ்கள் நிறுத்தாததை கண்டித்து மயிலாடுதுறை- சிதம்பரம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு நின்ற பஸ்களில் மாணவர்களை ஏற்றி பள்ளிகளுக்கு அனுப்பி வைத்த அப்பகுதி மக்கள், வரும் நாட்களில் இந்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்றால் மிகப் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.