உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்


உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்
x

உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இளங்கலை மருத்துவ படிப்பு முடித்த 101 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மருத்துவமனையில் கழிவுகளை சுத்தம் செய்ய விரைவில் ரூ.9 கோடியில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவ மையமாக வேலூர் மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வேலூர் பென்லேண்ட் மருத்துவமனையில் ரூ.197 கோடியில் கட்டிடங்கள் கட்டப்படும். பேரணாம்பட்டு மருத்துவமனையில் ரூ.7 கோடியே 58 லட்சத்தில் புறநோயாளிகள் கட்டிடம் கட்டப்படும். இதுபோன்று வேலூர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பின்போது அவர்களுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். மருத்துவர்களாகிய நீங்கள் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக விழாவுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கல்லூரி முதல்வர் பாப்பாத்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


Next Story