''மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்''- விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பேச்சு


மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்- விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பேச்சு
x

மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குனர் நிகர் ஷாஜி பேசினார்.

திருநெல்வேலி

மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குனர் நிகர் ஷாஜி பேசினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 2020-2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.

கல்லூரி முன்னாள் மாணவியும், பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குனருமான நிகர் ஷாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்க பதக்கங்களையும் வழங்கினார். பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்று கொண்டனர்.

பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர் ஷாஜி பேசியதாவது:-

முன்னாள் மாணவி

நெல்லை அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 விண்கலன்களை ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. எனினும் நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். நமது நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர்.

ஆனால் மக்கள்தொகை அதிகம் கொண்ட சீன நாட்டில் முதியவர்களே அதிகம் உள்ளனர். எனவே மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு, புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். தொழில் துறையில் நமது நாடு சிறந்து விளங்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story