மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்


மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
x

மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம்செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ராணிப்பேட்டை

மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம்செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

பரிசளிப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கல்வி நிறுவனத்தில் ஆற்காடு வட்ட அளவில் உள்ள 60 அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. கைப்பந்து, கபடி, கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும்விழா நேற்று காலை கலவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

அதிக கவனம் செலுதக்த வேண்டும்

வாழ்க்கையில் விளையாட்டு ஒரு முக்கியமானதாகும். விளையாடுபவன் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருப்பான். படிப்பது எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். ஆனால் விளையாட்டு இளமைப் பருவத்தில் தான் விளையாட முடியும். நானும் ஒரு தடைகள வீரன்தான். விளையாட்டில் தோல்வி அடைந்தால் அவனை முதலில் கை கொடுத்து மற்றொரு விளையாட்டு வீரன் தூக்கி விடுவான். விளையாட்டில் பொறாமை என்பதே இல்லை.பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். மாலையில் விளையாடும்போதுதான் வைட்டமின் டி கிடைக்கும். மாலை நேரத்தில் விளையாடும் போது சூரிய ஒளி கிடைக்கிறது. ஆகவே மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சச்சிதானந்த சுவாமி, கோட்டாட்சி தலைவர் பூங்கொடி, உதவி கலெக்டர் சத்திய பிரதாப், தாசில்தார் சமீம், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பரஞ்சோதி, வருவாய் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை நன்றி கூறினார்.


Next Story