மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும்


மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும்
x

மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.

வேலூர்

வேலூர் அரசு சட்டக்கல்லூரியில் சைபர் குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயகவுரி தலைமை தாங்கினார். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பேபி, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை தடுக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தினந்தோறும் புதிய சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. சட்டங்களை தெரிந்து உள்ள நீங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எப்படி கையாள்வது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க அதிகளவில் உஷராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வலைதளங்களில் பேசுவதும், போட்டோக்களை பரிமாற்றம் செய்வதும் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

குற்றங்கள் தொடர்பாக ஆப்- மூலம் புகார் அளிப்பது, இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிப்பது போன்றவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story