மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் கற்று சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும்


மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் கற்று சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும்
x

மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் கற்று சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

மாணவர்கள் கல்வியை நல்ல முறையில் கற்று சமுதாயத்தில் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

நிறைவு விழா

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை 11 நாட்கள் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்றது. புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

11 நாட்கள் சிறப்பான முறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் அதிகளவில் வருகை புாிந்து எண்ணற்ற பயனுள்ள புத்தகங்களை வாங்கி பயனடைந்து உள்ளனர்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புத்தக திருவிழாவிற்கு வந்து ரூ.90 லட்சம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி சென்று உள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினர் சிறைத் துறைக்கு நன்கொடையாக பல்வேறு தலைப்புகளில் உள்ள புத்தகங்களை வழங்கினார்கள்.

மிகப்பெரிய இடம்

மேலும் இன்றைய மாணவர் சமுதாயம் கல்வியை நல்ல முறையில் கற்று சமுதாயத்தில் மிகப்பெரிய உயரிய இடத்தை அடைய வேண்டும்.

கல்வி தான் அழியா சொத்து. எனவே கல்வியை எப்பொழுதும் எந்த வயதிலும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசினையும், அதிகமாக புத்தகங்களை வாங்கியவர்களுக்கு நினைவு பரிசினையும் கலெக்டர் வழங்கினார். மேலும் மாவட்ட நூலகம் சார்பில் சிறைத் துறைக்கு நன்கொடையாக புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட நூலக அலுவலர் வள்ளி, திருவண்ணாமலை தாசில்தார் சரளா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story