அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் `திடீர்' போராட்டம்
நெல்லையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் `திடீர்' போராட்டம் நடத்தினார்கள்
திருநெல்வேலி
நெல்லையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் 3-ம் ஆண்டு மாணவிகளை இடமாற்றம் செய்து, முதலாம் ஆண்டு மாணவிகளுடன் தங்கும்படி விடுதி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் விடுதிக்கு வெளியே நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story