திறனாய்வு தேர்வில் மாணவர்கள் வெற்றி
திறனாய்வு தேர்வில் களக்காடு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருநெல்வேலி
களக்காடு:
2022-2023-ம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் களக்காடு அருகே உள்ள இடையன்குளம் அமீர்ஜமால் பள்ளி 8-ம் வகுப்பு மாணவிகள் ஜெபினார், அபிநயா, ரவிவர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். அதேபோல் களக்காடு அருகே உள்ள மாவடி இந்து நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் சிவராம், அபிதா, சுவேதா, இன்னிஷா ஆகியோரை பள்ளி நிர்வாகி பெட்ஸி மற்றும் தலைமை ஆசிரியர் மதியழகன் மற்றும் உதவி ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story