அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி


அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி
x

அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இந்தப் பள்ளியில் அரக்கோணம் மற்றும் அம்மனூர், மேல்பாக்கம், பெருமூச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படாமல் உள்ளதால் இந்த பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்கள் மரத்தடியில் உட்கார வேண்டி உள்ளது.

இந்நிலையில் அந்த பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்து அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இரண்டு வகுப்பறைகள் அனைத்து அரசு தனியார் பள்ளிகளின் தேர்வுதாள் வைப்பறையாக நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாமல் உள்ளது. அதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பள்ளிக்கு போதிய கட்டிடம் கட்டி தர வேண்டி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story