மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்


மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்
x

அய்யம்பேட்டை அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தின் அடியில் வகுப்புகள் நடக்கிறது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தின் அடியில் வகுப்புகள் நடக்கிறது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மேல வழுத்தூர் ெரயிலடி புது தெருவில் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் வழுத்தூர், காமராஜபுரம், ெரயிலடி புதுதெரு, செருமாக்க நல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்ற இந்த பள்ளியில் தற்போது 37 மாணவ -மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். 4ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

முட்புதர்கள்

இந்த பள்ளியின் ஒரு கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. மற்றொரு கட்டிடம் சிதலமடைந்து முட்புதர்கள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பாதுகாப்பான கழிவறை வசதிகள் இல்லை. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு அட்டையில் மேற்கூரை வேயப்பட்ட ஓரே ஒரு வகுப்பறையில் மட்டுமே வகுப்புகள் நடந்து வந்தது. தற்போது இந்த பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாணவ- மாணவிகள் பள்ளி அருகில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கிறார்கள். மாணவ- மாணவிகளுக்கு குடிநீா் வசதியும், பாதுகாப்பான கழிவறை வசதியும் இல்லை.

புதிய கட்டிடம்

வகுப்பறை அருகில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.

தொடர்ந்து பள்ளியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர்.

எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பழமையான இந்த பள்ளி கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story