மாணவர்கள் வருமானம், இருப்பிட சான்றிதழ் பெற பள்ளியிலேயே சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மவட்டத்தில் மாணவர்கள் சாதி சான்று, இருப்பிடம் மற்றும் வருமான சாற்று பெறுவதற்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மவட்டத்தில் மாணவர்கள் சாதி சான்று, இருப்பிடம் மற்றும் வருமான சாற்று பெறுவதற்கு பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பள்ளியிலேயே சிறப்பு முகாம்
சாதி சான்று மற்றும் வருமானம், இருப்பிட சான்றுகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ்களை பெறுவதற்கு இ- சேவை மையத்தில் பதிவு செய்து அதன் பிறகு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் விசாரணைக்கு பிறகு துணை தாசில்தார், தாசில்தார் மூலமாக சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இ -சேவை மையத்தில் பதிவு செய்யப்படும் ஒரு சிலரின் மனுக்கள் மீது காலதாமதம் ஏற்படுவதாலும், மனுக்கள் நீக்கம் செய்யப்படுவதாலும் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சிரமமின்றி சான்றிதழ் பெற பள்ளியிலே வருவாய்த்துறை மூலம் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களுக்கு சான்றிதழ்
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின் பேரில் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் துரை தலைமை வகித்தார். ஆசிரியை வசந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தாசில்தார் சம்பத் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் கிராமநிர்வாக அலுவலர் விக்ரம் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.