அகழாய்வை பார்வையிட்ட மாணவர்கள்
விஜயகரிசல்குளம் அகழாய்வை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
தாயில்பட்டி,
விஜயகரிசல்குளம் அகழாய்வை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
அகழாய்வு
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
அதில் கல்பந்துகள், யானைதந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கதாலி, செப்புக்காசுகள் உள்பட 3,490 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வு நடைபெறும் பணியினை ராஜபாளையத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவி, மாணவிகள், நேரில் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து முதலாம் கட்ட அகழாய்வில் வைக்கப்பட்ட பொருட்களையும் அவர்கள் கண்டு ரசித்தனர்.
மண் பொம்மைகள்
அப்போது மாணவ, மாணவிகள் ேகட்ட சந்தேகத்திற்கு அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மக்கள் வசித்தபோது பயன்படுத்திய பொருட்களை சேதமடைந்த பொருட்கள், சேதமடையாத பொருட்களை பத்திரமாக எடுத்து கண்காட்சியில் வைத்துள்ளோம். அந்த காலத்தில் சுடு மண்ணால் செய்யப்பட்ட மண் பொம்மைகள் தான் தற்போது பிளாஸ்டிக் பொருளாக மாறி உள்ளது. சங்கினால் செய்யப்பட்ட ஆபரணங்கள், படிகாரத்தில் செய்யப்பட்ட நீல, பச்சை, வெள்ளை, ஊதா, நிறத்திலான பாசிமணிகள் அதிக அளவு கிடைத்துள்ளன. 400 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய நாணயங்கள் மற்றும் கைவினைப்பொருட்களும் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதன் மூலம் பண்டைய காலத்தில் மக்கள் வசித்த நாகரிகம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.