மேகமூட்டத்தால் சந்திரகிரகணத்தை பார்க்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்
மேகமூட்டத்தால் சந்திரகிரகணத்தை பார்க்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்
உடுமலை
உடுமலையில் சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் உற்று பார்ப்பதற்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சந்திரன் மாலை 5.54 மணிக்கு உதயமாகியது. இரவு 7.26 மணிவரை சந்திர கிரகணம் நீடித்தது.மேகங்கள் முழுவதுமாக மறைத்து விட்டதால் சந்திர கிரகணத்தை உடுமலையில் பார்க்க முடியவில்லை.அதனால் உடுமலையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் நேரலை மூலமாக பள்ளி மாணவ, மாணவிகள், அறிவியல் ஆர்வலர்கள் ஆகியோர் கண்டு களித்தனர். சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா ஆகிய இடங்களில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. புறநிழல் சந்திர கிரகணம்இரவு 7.26 வரை நீடித்தது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மாலா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான், சதீஷ்குமார், உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி, செயலாளர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.