ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
விடைத்தாள் நகல்
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதிய பயிற்சி நிறுவன மாணவர்கள், தனித்தேர்வர்கள் பலர் விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் வருகிற 26-ந்தேதி மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நோடிபிகேசன் என்பதை கிளிக் செய்து திரையில் தோன்றும் டி.இ.இ.இ. என்ற வாசகத்தினை கிளிக் செய்து பின்னர் டி.இ.இ. எக்சாம் ஆகஸ்டு 2022 ஸ்கேன் பி.டி.எப். டவுன்லோடிங் வழியாக விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல்
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்னர் மறுகூட்டல் -2, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், Revaluation/ Retotal- 2 application form DEEE என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதற்கான கட்டண தொகையை செலுத்த வேண்டும்.
விடைத்தாள் மறுகூட்டல் 2-க்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205 கட்டணத்தையும், விடைத்தாளின் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.505 கட்டணத்தையும் சேர்த்து அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.